Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: புரி
47 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) புரி-தல் puri-tal (p. 2772)
புரி¹-தல் puri- , 4 v. tr. 1. To desire; விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261). 2. To meditate upon; தியானித்தல். இறைவன் . . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make; செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி, 323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரி வானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. To bring forth, produce; ஈனுதல். பொன்போறார் கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give; கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள் (உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல் புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at, watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்து பார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174). 9. To investigate, examine; விசாரணை செய்தல். அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35). 10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மரு மறை (தேவா. 865, 5). 11. To exercise, perform; நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற் கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ. 2). — intr. 1. [M. puriyuka.] To be twisted; to curl; முறுக்குக்கொள்ளுதல். சுகிர்புரிநரம்பின் (மலைபடு. 23). 2. To turn; திரும்புதல். மற்றையருகே புரியில் (திவ். இயற். திரு'விருத். 42, வ்யா. பக். 247). 3. To abound; மிகுதல். வனப்புப் புரிந்த தகையினான் (பரிபா. 7, 51). 4. To shake; அசைதல். தார்புரிந் தன்ன (பதிற்றுப். 66, 13).

   2) புரி-த்தல் puri-ttal (p. 2773)
புரி²-த்தல் puri- , 11 v. tr. Caus. of புரி¹-. To cause to desire; விரும்பச்செய்தல். புரித்த தெங்கிளநீரும் (சீவக. 2402).

   3) புரி puri (p. 2773)
புரி³ puri , n. < புரி¹-. 1. Making, doing; செய்கை. (சூடா.) 2. [K. M. Tu. puri.] Cord, twine, rope; கயிறு. மாற்புரிநரம்பின் (பெரும்பாண். 181). 3. Strand, twist, as of straw; முறுக்கு. புரி யடங்கு நரம்பு (சிறுபாண். 34). 4. Curl, as of hair; ringlet; சுருள். புரிக்குழன் மடந்தை (சீவக. 2688). 5. Spiral, screw; சுரி. Colloq. 6. Conch; சங்கு. புரியொருகை பற்றி (திவ். இயற். 1, 31). 7. Desire; விருப்பம். (சீவக. 124, உரை.) 8. String, as of a lute; யாழ் நரம்பு. புரிவளர் குழலொடு (சீவக. 124). 9. Garland, as of pearls; மாலை. புரிமணி சுமந்த பொற்பூண் (சீவக. 619). 10. Tie, fastening; கட்டு. (சூடா.)

   4) புரி-த்தல் puri-ttal (p. 2773)
புரி⁴-த்தல் puri- , 11 v. tr. < பூரி-. 1. To fill up; நிரைத்தல். நன்மணி புரித்தன (சீவக. 1203). 2. To enchase, inlay; பதித்தல். முத்தம்வாய்புரித்தன (சீவக. 150).

   5) புரி puri (p. 2773)
புரி⁵ puri , n. < purī. 1. Town, city; நகரம். (பிங்.) 2. Capital city; இராசதானி. (சூடா.) 3. Village of an agricultural tract; மருதநிலத்தூர். (சூடா.) 4. Body; உடல். புரிக்கிலேசத்தையகற்றி யாட்கொள்ளும் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 129).

   6) புரி-தல் puri-tal (p. 2773)
புரி⁶-தல் puri- , 4 v. intr. < sphur. 1. To shine; to be manifest; விளங்குதல். சோதிபுரிந் திடுமதுவே (சி. சி. 2, 82). 2. To be understood; பொருள்விளங்குதல். நீ சொல்வது நன்கு புரிகின்றது.

   7) புரி-த்தல் puri-ttal (p. 2773)
புரி⁷-த்தல் puri- , 11 v. intr. < id. See புரி⁶-. நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி. 48).

   8) புரிக்குழல் purikkuḻal (p. 2773)
புரிக்குழல் puri-k-kuḻal , n. < புரி³ +. [M. purikuḻal.] See புரிகுழல். புரிக்குழன் மடந்தையர் (சீவக. 2688).

   9) புரிக்கூடு purikkūṭu (p. 2773)
புரிக்கூடு puri-k-kūṭu , n. < id. +. Straw bin for paddy; நெற்சேர். புரிக்கூட்டில் நின்ற . . . பலவருக்கத்து நெல்லு (சிலப். 10, 123, உரை).

   10) புரிகுழல் purikuḻal (p. 2773)
புரிகுழல் puri-kuḻal , n. < id. +. Curly tresses; கடைகுழன்று சுருண்ட கூந்தல். புரிகுழன் மாதர் (சிலப். 14, 37).

   11) புரிகை purikai (p. 2773)
புரிகை puri-kai , n. perh. புரி¹- +. (Nāṭya.) A hand-pose; அங்கக்கிரியைவகை. (சிலப். 3, 12, உரை. பக். 81.)

   12) புரிசடை puricaṭai (p. 2773)
புரிசடை puri-caṭai , n. < id. +. Tangled, matted locks; திரண்டு சுருண்ட சடை. (W.)

   13) புரிசம் puricam (p. 2773)
புரிசம்¹ puricam , n. < priya. cf. பிருசம். Scarcity; அருமை. Loc.

   14) புரிசம் puricam (p. 2773)
புரிசம்² puricam , n. < puruṣa. See புருடப்பிரமாணம். (W.)

   15) புரிசாலம் puricālam (p. 2773)
புரிசாலம் puricālam , n. cf. பிரிசாலம். (W.) 1. Urgent entreaty; கெஞ்சுகை. 2. Petition; விண்ணப்பம். Loc.

   16) புரிசாலம்பிடி-த்தல் puricālampiṭi-ttal (p. 2773)
புரிசாலம்பிடி-த்தல் puricālam-piṭi- , v. tr. < புரிசாலம் +. To beg earnestly; வருந்தி வேண்டுதல். (W.)

   17) புரிசை puricai (p. 2773)
புரிசை puricai , n. perh. puri-šaya. Fortification, wall; மதில். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17).

   18) புரிதம் puritam (p. 2773)
புரிதம் puritam , n. < sphurita. (Mus.) Tremolo; இராக கமகங்களுள் ஒன்று (பரத. இராக. 24.)

   19) புரிதிரி-த்தல் puritiri-ttal (p. 2773)
புரிதிரி-த்தல் puri-tiri- , v. tr. < புரி³ +. 1. To twist, as strands for rope-making; கயிற்றுக் காகப் புரிமுறுக்குதல். (யாழ். அக.). 2. To plot one's ruin; கெடுக்க உபாயந்தேடுதல். Loc.

   20) புரிதெறித்தல் puriteṟittal (p. 2773)
புரிதெறித்தல் puri-teṟittal , n. < id. +. Loc. 1. Breaking of a rope; கயிறு அறுகை. 2. Failure of a stratagem; உபாயந்தவறுகை.

   21) புரிந்தோர் purintōr (p. 2773)
புரிந்தோர் purintōr , n. < புரி¹-. Friends; நண்பர். (சூடா.)

   22) புரிநூல் purinūl (p. 2773)
புரிநூல் puri-nūl , n. < புரி³ +. See புரிமுந்நூல். திருமார்பினிற் புரிநூலும் பூண்டெழு பொற் பதே (தேவா. 385, 3).

   23) புரிப்பி-த்தல் purippi-ttal (p. 2773)
புரிப்பி-த்தல் purippi- , 11 v. tr. Caus. of புரி¹-. To cause to bend; வளைந்து திரும்பச்செய் தல். சந்ததந் திருத்தச் செம்பதம் புரிப்பித்து (திருவாலவா. கடவுள். 2).

   24) புரிபாய்ச்சு-தல் puripāyccu-tal (p. 2773)
புரிபாய்ச்சு-தல் puri-pāyccu- , v. tr. < புரி³ +. To arrange strands for making cord; சிறு கயிற்றை முறுக்குதற்கு ஒழுங்குபடுத்துதல். (J.)

   25) புரிமணை purimaṇai (p. 2773)
புரிமணை puri-maṇai , n. < id. +. Ring-shaped pad of twisted straw, etc.; பாண்டம் வைத்தற்கு வைக்கோலைச் சுற்றியமைத்த பீடம்.

   26) புரிமுகம் purimukam (p. 2773)
புரிமுகம்¹ puri-mukam , n. < purī + mukha. Tower at the front of a town; கோபுரம். (யாழ். அக.)

   27) புரிமுகம் purimukam (p. 2773)
புரிமுகம்² puri-mukam , n. < புரி³ +. (யாழ். அக..) 1. Conch; சங்கு. 2. Snail; நத்தை.

   28) புரிமுந்நூல் purimunnūl (p. 2773)
புரிமுந்நூல் puri-munnūl , n. < id. + மூன்று +. Sacred thread worn by the twice-born, consisting of three strands; பூணூல். புரி முந்நூ லணிமார்பர் (பெரியபு. தடுத்தாட். 117).

   29) புரிமுறுக்கல் purimuṟukkal (p. 2774)
புரிமுறுக்கல் puri-muṟukkal , n. < id. +. Tale-bearing; கோட்சொல்லுகை. (யாழ். அக.)

   30) புரிமுறுக்கு purimuṟukku (p. 2774)
புரிமுறுக்கு¹ puri-muṟukku , n. < id. +. 1. See புரிமுறுக்கல். 2. Unblown lotus; மலராததாமரைப்பூ. (W.)

   31) புரிமுறுக்கு-தல் purimuṟukku-tal (p. 2774)
புரிமுறுக்கு²-தல் puri-muṟukku- , v. tr. < id. +. To carry tales, back-bite; கோட் சொல்லுதல்.

   32) புரிமோகம் purimōkam (p. 2774)
புரிமோகம் purimōkam , n. (மலை.) 1. Rose-apple. See சம்புநாவல். 2. Wood-apple. See விளா.

   33) புரியட்டகம் puriyaṭṭakam (p. 2774)
புரியட்டகம் puriyaṭṭakam , n. < purya- ṣṭaka. Subtle body. See சூட்சுமசரீரம். மனாதி தன்மாத்திரை புரியட்டகந்தான் (சி. சி. 2, 64).

   34) புரியட்டகாயம் puriyaṭṭakāyam (p. 2774)
புரியட்டகாயம் puriyaṭṭa-kāyam , n. < puryaṣṭa + kāya. See புரியட்டகம். (W.)

   35) புரியட்டரூபம் puriyaṭṭarūpam (p. 2774)
புரியட்டரூபம் puriyaṭṭa-rūpam , n. < id. +. See புரியட்டகம். புரியட்ட ரூபந்தானே யாதனா சரீரமாகி (சி. சி. 2, 36).

   36) புரியணை puriyaṇai (p. 2774)
புரியணை puri-y-aṇai , n. < புரி³ +. See புரிமணை. (தைலவ. தைல.)

   37) புரியம் puriyam (p. 2774)
புரியம் puriyam , n. A kind of drama; கூத்துவகை. (பிங்.)

   38) புரியிட்டீர்-த்தல் puriyiṭṭīr-ttal (p. 2774)
புரியிட்டீர்-த்தல் puriyiṭṭīr- , v. tr. < புரி³ + இடு- +. See புரியைக்கட்டியிழு-. இடந்தொறும் புரியிட்டீர்த்தா ரிருநூறு காதம் (குற்றா. தல. கவுற்சன. 31).

   39) புரியைக்கட்டியிழு-த்தல் puriyaikkaṭṭiyiḻu-ttal (p. 2774)
புரியைக்கட்டியிழு-த்தல் puriyai-k-kaṭṭi-y-iḻu- , v. tr. < id. + கட்டு- +. 1. To fasten with strands of straw and draw; பழுதையினாற் கட்டி யிழுத்தல். 2. To vex, harass, torment; உபத்திரவப்படுத்துதல். நான் உன்னைப் புரியைக்கட்டி யிழுக்கிறேன்.

   40) புரிவலி-த்தல் purivali-ttal (p. 2774)
புரிவலி-த்தல் puri-vali- , v. intr. < id. +. To tie, fasten; கட்டுதல். முத்தாற் புரிவலித்து (திருவாலவா. 32, 20).

   41) புரிவளை purivaḷai (p. 2774)
புரிவளை puri-vaḷai , n. < id. +. Twisted bracelet; முறுக்குவளையல். புகலா தொழுகும் புரி வளையர் மென்றோள் (பு. வெ. 10, காஞ்சிப். 1.)

   42) புரிவிடு-தல் puriviṭu-tal (p. 2774)
புரிவிடு-தல் puri-viṭu- , v. tr. < id. +. To twist for making cord; கயிறு திரிக்கப் புரியை முறுக்குதல். (W.)

   43) புரிவில்புகழ்ச்சியணி purivilpukaḻcciyaṇi (p. 2774)
புரிவில்புகழ்ச்சியணி purivil-pukaḻcci-y-aṇi , n. < புரிவு¹ +. (Rhet.) Indirect or veiled eulogy; பழிப்பதுபோலப் புகழும் அணிவகை. (வீரசோ. அலங். 12.)

   44) புரிவின்மைநயம் puriviṉmainayam (p. 2774)
புரிவின்மைநயம் puriviṉmai-nayam , n. < id. + இன்-மை +. (Buddh.) A causal relation, one of four nayam, q.v.; புத்தசமயத்து நயம் நான்கனுள் ஒன்று. (மணி. 30, 218.)

   45) புரிவு purivu (p. 2774)
புரிவு¹ purivu , n. < புரி¹-. 1. Love, attachment; அன்பு. புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. ஒழிபு, 12). 2. Desire; விருப்பம். வினை தீர்க்கும் புரிவுடையார் (தேவா. 905, 1). 3. Action, practice; தொழில். இருவிர னிமிர்த்துப் புரிவொடு சேர்த்து (கல்லா. 8). 4. Error; தவறு. புரிவிலா மொழி விதூரன் (பாரத. சூது. 43). 5. Escape; தப்பி நீங்குகை. புரிவின்றி . . . போற்றுவ போற்றி (பு. வெ. 8, 20). 6. Change; வேறுபடுகை. (அக. நி.)

   46) புரிவு purivu (p. 2774)
புரிவு² purivu , n. < புரி⁶-. Clearness; lucidity; தெளிவு. புரிவில் புகழ்ச்சி சுட்டே (வீரசோ. அலங். 12).

   47) புரிகன்மம் purikaṉmam (p. S367)
புரிகன்மம் puri-kaṉmam , n. < புரி- +. (Math.) Logarithm. See மாற்றிலக்கம். Pond.