Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: அடை
2 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) அடை aṭai (p. 55)
அடை³ aṭai , n. < அடு¹- [T. aḍa, K. aḍe, M. aṭa.] 1. Joining; பொருந்துகை. (கம்பரா. மந்திர. 88.) 2. Delivering, conveying; சேர்ப்பிக்கை. அவன்கணடை சூழ்ந்தார்நின்னை (கலித். 115, 18). 3. Resort, refuge; அடைக்கலம். 4. Deposit, that which has been accepted for safe keeping; அடைக்கலப் பொருள். (ஈடு, 5, 10, 5.) 5. Thin cake, wafer; ஒரு பணிகாரம். நமக்கு மாவடை பழவனம் பிரியம் (அழகர்கல. 55). 6. Leaf; இலை. புழற்கா லாம்ப லகலடை (புறநா. 266). 7. Betel leaf; வெற்றிலை. நூறுகாயடை கூடும் (சி. சி. பர. உலோகா. மறு. 7). 8. Greens; இலைக்கறி. (பிங்.) 9. Incubation; அடைகாக்கை. 10. Gravity, weight; கனம். (பிங்.) 11. Prop, slight support; தாங்கி. (W.) 12. Bank, shore; கரை. (தொல். சொல். 419, உரை.) 13. A decoction. See அடைகஷாயம். (தைலவ.) 14. Sprout; முளை. பூம்புற நல்லடை (பெரும்பாண். 278). 15. Price; விலை. (பிங்.) 16. Way; வழி. (பிங்.) 17. Qualifying word or clause, attribute, adjunct; விசேடணம். ஈரடை முதலோ டாதலும் (நன். 403). 18. (Gram.) Word denoting quality; பண்பு. அடைசினை முதலென (தொல். சொல். 26). 19. Detached foot that is a constituent of kalippā; கலிப்பாவி னுறுப்பாகிய தனிச்சொல். (தொல். பொ. 444.) 20. King's share of the produce of the land, whether one-sixth or one-tenth or otherwise; நிலவரி. (W.)

   2) அடை aṭai (p. S028)
அடை³ aṭai , n. < செருப்படை. A herb. See அடி². (பச். மூ.)