Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: சின்னம்
6 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) சின்னம் ciṉṉam (p. 1468)
சின்னம்¹ ciṉṉam , n. < சிறு-மை. [T. K. M. cinna.] 1. Smallness, minuteness; அற்பம். சின்னமானுஞ் சின்னவுற்பவம் (ஞானா. 59, 16). 2. Anything small; சிறியது. (J.) 3. Winnowing fan; முறம். (பிங்.) 4. Drizzling; மழைத்தூறல். (அக. நி.) 5. Derision, slight; இகழ்ச்சி. Loc.

   2) சின்னம் ciṉṉam (p. 1468)
சின்னம்² ciṉṉam , n. < cihna. 1. Sign, insignia, mark, token; அடையாளம். (பிங்.) 2. Pudendum mulibre; பெண்குறி. (பிங்.) 3. A kind of trumpet; காளம். சின்னங்கள் கேட்பச் சிவனென் றே வாய்திறப்பாய் (திருவாச. 7, 7).

   3) சின்னம் ciṉṉam (p. 1468)
சின்னம்³ ciṉṉam , n. < chinna. 1. Piece; துண்டு. வாளி . . . சின்னமாக வீர்ந்திட (திருவாலவா. 36, 8). 2. Anything broken; முறிவுற்றது. கார்முகஞ் சின்னமென்றும் (கம்பரா. கரன். 177). 3. Powder, pollen; பொடி. (பிங்.) சின்னப்படுங் குவளை (திருக்கோ. 334). 4. See சின்னப்பூ², 1. நனை சின்னமு நீத்த நல்லார் (கம்பரா. பூக்கொய். 12). 5. Petal-pieces of flowers; கிள்ளுப்பூ. நன்னுதலப்புஞ் சின்னம் (கம்பரா. வனம். 14). 6. Coin, as a piece of metal; காசு. நாலுசின்னங் கைப்பட்டவாறே (ஈடு, 4, 9, 2). 7. Gold piece put by a warrior into his mouth when starting for battle; போர்க் குப்போகும்போது வீரர்கள் தம் வாயிலிட்டுக்கொள்ளும் பொற்றகடு. (சீவக. 2303, உரை.)

   4) சின்னம் ciṉṉam (p. 1468)
சின்னம்⁴ ciṉṉam , n. < chinna-ruhā. Gulancha. See சீந்தில். சின்னமானுஞ் சின்னவுற் பவம் (ஞானா. 59, 16).

   5) சின்னம் ciṉṉam (p. S281)
சின்னம்¹ ciṉṉam , n. < சின்-மை. Odd; சில்வானம். முந்நூற்றுச் சின்னம் நாள் (S. I. I. iv, 140).

   6) சின்னம் ciṉṉam (p. S281)
சின்னம்² ciṉṉam , n. < Pālijinno < Skt. jīrṇa. Being worn out or decayed; சீர்ணம். சின்னச்சீரை துன்னற் கோவணம் (பதினொ. திருவிடை. மும். 7).