Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: புலன்
1 result Highlight Tamil and press "t" to transliterate.

   1) புலன் pulaṉ (p. 2787)
புலன் pulaṉ , n. [K. polan.] 1. Sense of the body, of five kinds, viz., cuvai, oḷi, ūṟu, ōcai, nāṟṟam சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் இந்திரிய விஷயங்கள். கண்டுகேட் டுண் டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 2. Organ of sense; பொறி. புலனொடு புணரான் (ஞானா. 48, 9). 3. The organ of motor action; கரு மேந்திரியம். இருபுலனும் . . . இகழாரே (ஆசாரக். 33). 4. Wisdom, intelligence; அறிவுடைமை. செல்வம் புலனே புணர்வு (தொல். பொ. 259). 5. Intellect; discernment; விவேகம். (நாலடி, 121.) 6. That which is clear or obvious; பிரத்தியட்சம். பெரும்புணர்ப் பெங்கும் புலனே (திவ். திருவாய். 2, 8, 3). 7. Limb; உறுப்பு. ஒன்பது வாய்ப்புலனும் (நாலடி, 47). 8. Arable land; வயல். புலனந்த (பரிபா. 7, 9). 9. (Poet.) A merit in composition consisting in the use of local idioms of much suggestiveness; செவ்விதிற் கிளந்தோதல் வேண்டாது சேரிமொழியாற் குறித்தது தோன்றும் நூல்வனப்பு ளொன்று. (தொல். பொ. 554.) 10. See புலம், 2, 3, 4, 9, 10, 11.