Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: வட்டம்
2 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) வட்டம் vaṭṭam (p. 3469)
வட்டம்¹ vaṭṭam , < Pkt. vaṭṭa < vṛtta. n. 1. Circle, circular form, ring-like shape; மண்ட லம். (தொல். சொல். 402, உரை.) 2. Halo round the sun or moon, a karantuṟai-kōḷ; பரிவேடம். (சிலப். 10, 102, உரை.) (சினேந். 164.) 3. Potter's wheel; குயவன் திரிகை. (பிங்.) 4. Wheel of a cart; வண்டிச்சக்கரம். (யாழ். அக.) 5. The central portion of a leaf-plate for food; உண்கல மாய்த் தைக்கும் இலையின் நடுப்பாகம். Loc. 6. cf. āvṛtti. Turn, course, as of a mantra; தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து (விநாயகபு. 74, 214). 7. Revolution, cycle; சுற்று. (W.) 8. Cycle of a planet; ஒரு கிரகம் வான மண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழவட்டமாயிற்று. 9. Circuit, surrounding area or region; சுற்றுப்பிரதேசம். கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949). 10. A revenue unit of a few villages; சில ஊர்களைக் கொண்ட பிரதேசம். 11. See வட்டணை², 3. தார் பொலி புரவிவட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442). 12. Items or course of a meal; விருந்து முதலியவற்றிற்குச் சமைத்த உபகரணத்திட்டம். Nāñ. 13. A kind of pastry; அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378). 14. See வட்டப்பாறை, 3. வடவர்தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51). 15. Circular ornamental fan; ஆலவட்டம். செங்கேழ் வட்டஞ் சுருக்கி (நெடுநல். 58). 16. Bracelet worn on the upper arm; வாகு வலயம். (பிங்.) 17. Scale-pan; தராசுத்தட்டு. வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781). 18. Hand-bell; கைம்மணி. (பிங்.) 19. Shield; கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). (பிங்.) 20. A kind of pearl; முத்து வகை. முத்துவட்டமும் அனுவட்டமும் (S. S. I. I. ii, 22). 21. Seat; chair; பீடம். (யாழ். அக.) 22. Pond, tank; குளம். (பிங்.) 23. Receptacle; கொள்கலம். (யாழ். அக.) 24. Large waterpot; நீர்ச்சால். (பிங்.) 25. A kind of water-squirt; நீரெறிகருவி. பூநீர்பெய் வட்டமெறிய (பரிபா. 21, 42). 26. Curve, bend; வளைவு. வில்லை வட்டப் பட வாங்கி (தேவா. 5, 9). 27. A kind of boomerang; பாராவளை. புகரினர் சூழ் வட்டத்தவை (பரிபா. 15, 61). (பிங்.) 28. Cloth; ஆடை. வாலிழை வட்டமும் (பெருங். உஞ்சைக். 42, 208). (சூடா.) 29. Boundary, limit எல்லை. தொழுவல்வினை யொல்லை வட்டங்கடந் தோடுத லுண்மை (தேவா. 5, 9). 30. Polish, refinement; திருத்தம். வட்டமாய்ப் பேசி னான். Loc. 31. A unit for measuring the quantity of water = 500 average potfuls, as the amount necessary for a paṅku for one week; ஐந்நூறு சால்கொண்ட நீரளவு. 32. Sect, tribe; மக்கட் பிரிவு. Loc. 33. The middle ear of an elephant; யானையின் நடுச்செவி. (பிங்.) 34. Lowness; depth, as of a valley; தாழ்வு. (அக. நி.) 35. Sheaves of paddy spread on a threshing-floor for being threshed; களத்திற் சூடடிப்பதற்குப் பரப்பிய நெற்கதிர். Nāñ. 36. See வட்டமரம், 2. (W.) — part. Each, every; தோறும். ஆட்டைவட் டம் காசு ஒன்றுக்கு . . . பலிசை (S. I. I. ii, 122, 27).

   2) வட்டம் vaṭṭam (p. 3469)
வட்டம்² vaṭṭam , n. < U. baṭṭā. 1. Rate of exchange; money-changer's commission; நாணயமாற்றின் வட்டம். நாணயத்தின் வட்டமென் றும் (பணவிடு. 179). 2. Trade discount; ரொக்க வியாபாரத்திற் கொடுக்கும் தள்ளுபடி. Loc. 3. Profit; இலாபம். அந்த வியாபாரத்தில் எனக்கு வட்டமொன்று மில்லை.