Digital Dictionaries of South Asia
Tamil lexicon
  
   நோய்¹ nōy , n. < நோ-. 1. Malady, distemper, ailment, sickness, disease; வியாதி. நோயி கந்து நோக்குவிளங்க (மதுரைக். 13). 2. Sorrow, grief; துக்கம். (பிங்.) 3. Affliction, trouble; துன்பம். அதிர வருவதோர் நோய் (குறள், 429). 4. Fault; குற்றம். பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய் (குறள், 851). 5. Dread, fear; அச்சம். நோ யுடை நுடங்குசூர் (பரிபா. 5, 4). 6. [M. nōyi.] Ache, pain, smart; நோவு. (W.)

   நோய்²-த்தல் nōy- , 11 v. intr. < நோய். (J.) 1. To be or become sickly or diseased; பிணி யால் வருந்துதல். 2. To be broken in constitution; to be debilitated; மெலிதல். 3. To wither, as trees, crops; வாடுதல். 4. To become poor or worn out, as lands; சாரமற்றுப்போதல்.

   நோய்³-தல் nōy- , 4 v. intr. See நோய்²-. பயிர் நோய்ந்துபோய்விட்டது. Tinn.

   நோய்காடேறுதல் nōy-kāṭēṟutal , n. < நோய் +. The disappearance of a disease on the approach of death; மரணத்தறுவாயில் வியாதி நீங்குகை.

   நோய்ச்சல் nōyccal , n. < id. 1. Being sickly; வியாதிப்படுகை. 2. See நோய்ஞ்சல். (W.)

   நோய்ஞ்சல் nōyñcal , n. < id. 1. Sickly, emaciated person or animal; மெலிந்த-வன்-வள்-து. 2. Disease; நோய். (யாழ். அக.)

   நோய்ஞ்சலன் nōyñcalaṉ , n. < நோய்ஞ்சல். See நோயாளி. (W.)

   நோய்ஞ்சி nōyñci , n. < நோய். See நோயாளி. (W.)

   நோய்ஞ்சியன் nōyñciyaṉ , n. < நோய்ஞ்சி. See நோயாளி. (W.)

   நோய்முகன் nōy-mukaṉ , n. < நோய் +. Saturn; சனி. (தைலவ. தைல.)

   நோய்விழுதல் nōy-viḻutal , n. < id. +. Infection, as of plants; செடிகளில் வியாதிபிடிக்கை.

   நோயணுகாவிதி nōy-aṇukā-viti , n. < id. +. A treatise on hygiene by Tēraiyar; தேரையர் இயற்றிய ஒரு மருத்துவநூல்.

   நோயாளி nōy-āḷi , n. < id. +. Sick person, patient; invalid; பிணிப்பட்டவன்.

   நோயின்சாரம் nōyiṉ-cāram , n. < id. +. A treatise on diseases; நோயைப்பற்றிய ஒரு நூல்.

   நோயுள்ளதீட்டு nōy-uḷḷa-tīṭṭu , n. < id. +. Painful menstruation, dysmenorrhoea; நோவோடுகூடிய மாதவிடாய். (M. L.)

   நோயெச்சம் nōy-eccam , n. < id. +. Remnants of a disease; வியாதியின் சேடம். (W.)

   நோல்¹-தல் [நோற்றல்] nōl- , 10 v. tr. 1. To endure, suffer patiently, as hunger; பொறுத்தல். உண்ணாது நோற்பார் பெரியர் (குறள், 160). 2. To practise; அனுஷ்டித்தல். மறவாமே நோற்பதொன் றுண்டு (குமர. பிர. நீதிநெறி. 20). — intr. [T. nōtcu, K. nōn, M. nōlka.] To do penance, practise austerities; தவஞ்செய்தல். நோற்றோ ருறைவது (மணி. 17, 65).

   நோல்² nōl , n. < நோல்-. A means of attaining salvation. See கிரியை. நோக்கினைய நோலினையு முடைத்தாமால் (சிவதரு. சிவஞானயோ. 18).

   நோலை nōlai , n. 1. Sesame ball; எள்ளு ருண்டை. புழுக்கலு நோலையும் (சிலப். 5, 68, அரும்.). 2. A preparation of sesame seed; எட்கசிவு. அணங்குடை நோலை (பு. வெ. 3, 5).

   நோவல் nōval , n. Bread; அப்பம். (அக. நி.)

   நோவாளி nōvāḷi , n. < நோவு +. 1. See நோயாளி. (W.) 2. Poor man; மிடியன். (யாழ். அக.)

   நோவு nōvu , n. < நோ-. [K. M. Tu. nōvu.] 1. Pain, hurt, anguish; வலி. 2. Mental anguish; துன்பம். (திவா.) 3. Disease; வியாதி. 4. Labour pains; பிரசவவேதனை. ஈன்றக்கா னோவும் (நாலடி, 201). 5. Pity; இரக்கம். தாம் நோவுபடா நிற்பர். (ஈடு).

   நோவுசாத்து-தல் nōvu-cāttu- , v. intr. < நோவு +. To suffer from disease, as eminent religious persons; பெரியோர் நோய்வாய்ப் படுதல். ஶ்ரீயமுனைத்துறைவர் திருமேனியிலே நோவு சாத்திக்கொண்டிருக்க (குருபரம். 241). Vaiṣṇ.

   நோவெடுத்தல் nōveṭuttal , n. < id. +. Commencement of labour pains; பிரசவவேதனை யுண்டாகை.

   நோழிகை nōḻikai , n. perh. நாழிகை. Weaver's clew of yarn; நெசவுநூலின் தாறு. (W.)

   நோளை nōḷai , n. prob. நொள்ளை. Sickly condition, used in compound words; பிணி யுண்டநிலை. நோளைச்சரீரம். (W.)

   நோற்பார் nōṟpār , n. < நோல்-. Ascetics, those who practise religious austerities; தவஞ் செய்வார். நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள், 48).

   நோற்பாள் nōṟpāḷ , n. < id. (Jaina.) A female ascetic; சைன சந்நியாசினி. (சூடா.)

   நோற்பு nōṟpu , n. < id. 1. Bearing, endurance; பொறுமை. (W.) 2. Performing penance; தவஞ்செய்கை.