Digital Dictionaries of South Asia
Tamil lexicon
  
   *உருவகம் uruvakam , n. < rūpaka. Figure of speech in which the uvamēyam or the thing compared is represented as identical with the uvamāṉam or the object of comparison, metaphor; உவமேயத்தை உவமானத்துடன் அபேத மாகக் கூறும் அணி. (தண்டி. 34.)

   *உருவகி-த்தல் uruvaki- , 11 v. tr. < id. To speak metaphorically; உருவகப்படுத்துதல்.

   *உருவங்காட்டி uruvaṅ-kāṭṭi , n. < rūpa +. Mirror; கண்ணாடி. (பிங்.)

   *உருவச்சாதகம் uruva-c-cātakam , n. < rūpa + sādhaka. See உருவசாத்திரம். உருவச்சாத கத்துக் கேற்பப் பெண்ணலங்கிடந்த பேதை (சீவக. 1571).

   *உருவசாத்திரம் uruva-cāttiram , n. < id. +. Science of the shape, features and marks of the human body, including palmistry and physiognomy, and of the characteristic qualities betokened by them, one of aṟupattu- nālukalai, q.v.; உறுப்பமைதியால் ஏற்படும் உயர் விழிவுகளைக்கூறும் நூல்.

   *உருவசி uruvaci , n. < Urvašī. See ஊர்வசி. உருவசி யென்னும் பேரா னொப்பிலா வழகு வாய்ந்த திருநிகர் மங்கை (மச்சபு. அகத்தியர்பூ. 17).

   *உருவம் uruvam , n. < rūpa. 1. Shape, visible form, figure; வடிவம். சோதியாய்த் தோன்று முருவமே (திருவாச. 22, 9). 2. Body; உடல். உரு வமு முயிரு மாகி (தேவா. 1028, 3). 3. Beauty; அழகு. உருவப்பூணினாய் (நைடத. தேவியைக். 3). 4. Colour, hue; நிறம். உருகப் பல்பூத் தூஉய் (திருமுரு. 241). 5. Disguise, assumed form; வேஷம். வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள், 273). 6. Die used in gaming; கவறு. முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல (கலித். 136). 7. Repetition of mantras: மந்திரவுரு. நின்றிரண்டுருவ மோதி (சீவக. 1289). 8. Image made of clay or fashioned of brick, idol, statue; பிரதிமை. 9. (Buddh.) Bodily form, one of pan̄ca-kantam, q.v.; பஞ்ச கந்தங்களுளொன்று. ஒங்கியவுருவமோடும் (சி. சி. பர. செளத். 30).

   *உருவமெடு-த்தல் uruvam-eṭu- , v. intr. < id. +. To assume a form, as a deity; வடிவங் கொள்ளுதல்.

   *உருவரை uruvarai , n. < urvarā. Fertile soil, productive land; செழிப்புள்ளநிலம். (சூடா.)

   உருவல் uruval , n. prob. உருவு-. Kind of ear-drops; காதணிவகை. (W.)

   *உருவழி-தல் uru-v-aḻi- , v. intr. < rūpa +. 1. To become disfigured by disease, to be deformed; மேனிவேறுதல். 2. To be entirely ruined; முழுதுஞ்சிதைதல்.

   *உருவா-தல் uru-v-ā- , v. intr. < id. +. 1. To assume a form, take shape; வடிவுறுதல். 2. To become sound, to improve, to be reformed; சீர்ப்படுதல்.

   *உருவாக்கு-தல் uru-v-ākku- , v. tr. caus. of உருவா-. 1. To shape, fashion, mould; உருவ முடையதாகச்செய்தல். 2. To repair, reform, improve; சீர்ப்படுத்துதல்.

   உருவாஞ்சுருக்கு uruvāñ-curukku , n. < உருவு- +. See உருவுசுருக்கு. Loc.

   *உருவாணி¹ uru-v-āṇi , n. < id. + āṇi. Axle-bolt, linchpin; அச்சாணி. தேரகத் தூடுரு வாணியின் (உபதேசகா. சிவத்துரோ. 411).

   *உருவாணி² uru-v-āṇi , n. prob. rūpa + ஆள்-. Emaciated body, body which is all skin and bone only; மெலிந்தவுடல். (J.)

   *உருவாணிபற்று-தல் uru-v-āṇi-paṟṟu- , v. intr. < id. +. To grow lean, to be emaciated; மெலிவடைதல். (W.)

   *உருவாரச்சம்மட்டி uru-vāra-c-camaṭṭi , n. prob. urvāru +. A straggling shrub with simple oblong leaves and greenish flowers, m.sh., Cadaba indica; வீழிச்செடி. (மலை.)

   *உருவாரம்¹ uruvāram , n. < urvāru. Mottled melon. See வெள்ளரி. (பிங்.)

   *உருவாரம்² uru-vāram , n. < rūpa + ஆர்-. Image; பிரதிமை. Loc.

   உருவி¹ uruvi , n. 1. A plant growing in hedges and thickets. See நாயுருவி. எள்ளிரதம் படியுருவி (தைலவ. தைல. 103). 2. Honeysuckle mistletoe. See புல்லுருவி. (W.) 3. Indian nightshade. See முள்ளி. (W.)

   *உருவி² uruvi , n. < urvī. The wide earth; பூமி. பாருருவி நீரெரிகால் (திவ். திருநெடுந். 2).

   *உருவிடு-தல் uru-v-iṭu- , v. tr. < rūpa +. To repeat mantras; மந்திரஞ்செபித்தல்.

   உருவியழு-தல் uruvi-y-aḻu , v. intr. < உருவு- +. To weep and sob; விம்மியழுதல். Loc.

   உருவியுப்பு uruvi-y-uppu , n. < உருவி¹ +. Medicinal salt made from Achyranthes aspera; நாயுருவியுப்பு. (W.)

   *உருவிலாளன் uru-v-il-āḷaṉ , n. < rūpa + இல் neg. + ஆள்-. Kāma, who has no corporal body; மன்மதன். மீன விலோதனத் துருவிலாளன் (மணி. 5, 6).

   *உருவிலாளி uru-v-il-āḷi , n. < id. +. See உருவிலாளன். உருவிலாளி யுடல்பொடித்தவொருவர் (திருவிளை. வளையல். 35).

   *உருவிலி uru-v-ili , n. < id. +. See உருவிலாளன். (பிங்.)